search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா கால்வாய்"

    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அதன்படி வருடந்தோரும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இதற்காக 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. 1983-ல் துவங்கிய இப்பணிகள் 1995-ல் முடிக்கப்பட்டன. 1996-ல் முதல் முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கரைகள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதனை தடுக்க கடந்த 8 வருடங்களுக்கு இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற் கொண்டனர். எனினும் கரைகள் சேதமடையும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்த வாக்கம் உட்பட 25 பகுதிகளில் கால்வாய் கரை சேதமடைந்தது.

    இவற்றை சீர் செய்ய வில்லை என்றால் கால்வாயில் தண்ணீர் வரும் போது கரைகள் உடைந்து அருகில் உள்ள தண்ணீர் கிராமங்களில் பாயும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கரைகளை சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பருவ மழையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா கால்வாயில் மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்காக ரூ. 24 லட்சம் செலவில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.

    இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

    1984-ல் கிருஷ்ணா கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டது. 1996-ல் முதல் முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின் வருடத்துக்கு இரண்டு முறை விதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கண்டலேறு அணையில் தற்போது நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக அதாவது ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை.

    இதனால் தற்போது கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழைநீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரிக்கு சென்றடைய ஏதுவாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா நதி கால்வாயில் தூர்வார தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 24 லட்சம் ஒதுக்கியது.

    இந்த நிதியை கொண்டு தூர்வாறும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கால்வாய் கரையில் அடர்த்தியாக வளர்ந்த முட்புதர்கள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கால்வாய் தூர் வாரும் பணிகளை 15 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் தெரிவித்தார்.
    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக நதி போல் பாய்ந்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் உற்சாக குளியலிடுவதால் கிருஷ்ணா கால்வாய் சுற்றுலா தலம் போல் தெரிகிறது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த 20 நாட்களுக்கு மேலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 290 கனஅடி வருகிறது.

    இந்த தண்ணீர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நதி போல் பாய்ந்து செல்கிறது.

    இதனை காணும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கிருஷ்ணா கால்வாயில் குழந்தைகளுடன் உற்சாக குளியல் போடுகிறார்கள்.

    இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்கவும், குளியல் போடவும் கிருஷ்ணா கால்வாயில் திரண்டு வருகிறார்கள். இதனால் அப்போது சுற்றுலா தளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதுபற்றி பொது மக்கள் கூறும்போது, ‘‘கிருஷ்ணா கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்க ரம்மியமாக உள்ளது. வெயிலுக்கு இதமாக குளிக்கும் போது உற்சாகம் அளிக்கிறது. கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லாததால் குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்க முடிகிறது’’ என்றனர்.

    பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 1305 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. சென்னை குடிநீர் தேவைக்காக 114 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியில் 196 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231), சோழவரம் ஏரியில் 70 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081), புழல் ஏரியில் 1623 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3300) தண்ணீர் இருப்பு உள்ளது.
    திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது பெண் தவறி விழுந்து மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    திருவள்ளூர்:

    ஆவடி, கவரபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி (வயது 35). இவர்கள் உறவினர்களுடன் வெள்ளவேடை அடுத்த கொப்பூரில் உள்ள மாந்தோப்புக்கு மாம்பழம் வாங்க அரண்வாயல் வழியாக வந்தனர்.

    அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர். இதில் தேவி நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தார். அவரை உறவினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தேவி உடலை மீட்டனர்.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×